555 நாட்கள் இதயம் இன்றி உயிர் வாழ்ந்த இளைஞன் – மருத்துவ சாதனை…!

மனித உடல் எனும் வாகனம் இயங்குவதற்கு அடிப்படை இயந்திரம் இதயம் எனலாம். ஒவ்வொரு அவயவங்களும் முறையாக இயங்குவதற்கான எரிபொருளை (இரத்தம்) சீராக வழங்கி மனித உடல் தொழிற்பட இதயத்தின் சீரான இயக்கம் அவசியமாகும். ஒரு நொடி அது செயலிழந்து போய் விடினும் நம் உடலும் அதே கதிதான். இவ்வாறு அதி சிறப்பு வாய்ந்த இதயம் உடலிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பொருத்தமான இதயம் பெறும் வரையிலும் சுமார் 555 நாட்கள் இளைஞர் ஒருவர் உயிர் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு மாற்று இதயம் மருத்துவர்களால் பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மெக்சிக்கனைச் சேர்ந்த லார்கின் எனும் இளைஞன் சிறு வயதாக இருக்கும் போது அவனுக்கு ARVD (Arrhythmogenic Right Ventricular Dysplasia) என்னும் இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந் நோய்த் தாக்கத்தால் அவ் இளைஞனுக்கு இதயத் துடிப்பு சீரற்றும் அதிக வேலை செய்ய முடியாத நிலையும் இருந்துள்ளது. இதனால் இதய சீராக்கல் கருவி ஒன்று பொருத்தப்பட்டது.

இந்நிலையில் 2012 ஆண் ஆண்டில் லார்கினின் இதயம் முற்றாக செயலிழந்து போன நிலையில் மாற்று இதயத்திற்காக அவர் 555 நாட்கள் காத்திருந்துள்ளார். அதுவரையிலும் உடலுக்கு வெளியில் வைத்து இயக்கப்படும் செயற்கை இதயம் ஒன்று பொருத்தப்பட்டு அவர் உயிர் வாழ்ந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அவருக்கு மாற்று இதயம் ஒன்றினை மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!