இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். இன்றைய பஞ்சாங்கம்
14-01-2019, மார்கழி 30, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 12.37 வரை பின்பு வளர்பிறை நவமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. போகிப் பண்டிகை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்-மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம் 12.00-01.00, மதியம் 3.00-4.00, மாலை 06.00 -08.00, இரவு 10.00-11.00.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேஷராசி நேயர்களே: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண்விரயங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உள்ளவர்களுடன்தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால்பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்அனுகூலம் கிட்டும்.

ரிஷபராசி அன்பர்களே: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனராசி காரர்களே: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். எடுத்துக்கொண்ட பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகராசி நேயர்களே: உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது உள்ளார்ந்த வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது. நம்பிக்கையோடு செயற்படுங்கள். வெற்றி உங்களதே.

சிம்மராசி அன்பர்களே: இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.உடல் நலனில் அவதானம்தேவை. உடலில் சிறுஉபாதைகள் ஏற்படலாம். நீங்கள் இன்று மதியம் வரையிலும் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறைந்துமுன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தடைப்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

துலாராசி உறவுகளே: உள்ளத்தில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும்.

விருச்சிகராசி நேயர்களே: நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும்.

தனுசுராசி அன்பர்களே: இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும்கிட்டும்.

மகரராசி காரர்களே: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி உறவுகளே: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனராசி நேயர்களே: பணம் தொடர்பான சிக்கல்கள் தீரும். ஆனால், சில பண விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். கவனச் சிதறல்கள் நீங்கும்.

error: Alert: Content is protected !!