இலங்கை வவுனியாவில் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி…!

இலங்கையின் வடபகுதி தாலிக்குளம் பிரதேசத்தில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து 15 வயதான பாடசாலை மணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அக் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்ககுமார் லோபிகா என்று தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து பாடசாலை உடைகளை துவைப்பதற்காக தோட்டப் பகுதியில் அமைந்திருந்த கிணற்றடிக்குச் சென்றிருந்த சமயம் பாதுகாப்பற்ற அக் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்தே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிணற்றடிக்குச் சென்ற பிள்ளையைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்ற வேளையில் கிணற்றினுள்ளே அவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுக் கிணறுகளில் தமது தேவைகளை நிறைவேற்றும் மக்கள் தம் பிள்ளைகள் மீத அக்கறையுடன் செயற்படவேண்டிய அவசியத்தை உணராமையே மாணவியின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!