இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வென்று தன் திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி…!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நியூசிலாந்து அணி 219 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இந்திய அணி 19.2 ஓவர்கள் முடிவில் 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ரி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் முன்ரோ-சேபெர்ட் ஜோடி இப்போட்டியில் சோபிக்க தவறியது.

பின்னர் வந்த வில்லியம்சன், மிச்சேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டி கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதேபோல் பொறுமையாக ஆடி வந்த டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 159 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தவான்-ரோகித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்து அணியைப் பலப்படுத்தினர். தொடர்து சிறப்பாக ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. எதிர்வரும் ஞாயிறன்று ஹாமில்டன் நகரில் 3 ஆவது போட்டி நடைபெற உள்ளது.

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!