தமிழ் மக்களின் விடியலை வேண்டி 150 கி.மீ பிரதட்டை எடுக்கும் அன்புள்ளம்…

காலம் காலமாக தமிழ் மக்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பது இல்லாது அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் மக்களிற்கென்று ஒரு விடியல் பிறக்க வேண்டும் என்று வேண்டி அன்பர் ஒருவர் நீண்ட தூர பிரதட்டை ஒன்றை மேற்கொண்டுள்ளார். 150 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நேர்த்திக் கடனானது மன்னாரிலிருந்து அநுராதபுரம் வரை உருண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.00 மணிக்கு ஆரம்பமான பிரதட்டை மன்னாரிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரை சென்று பின் அங்கிருந்து அநுராதபுரம் சென்றடைவார் என கூறப்படுகின்றது.

 

இவரின் இந்த முடிவிற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் நீண்ட தூர பிரதட்டை என்றபடியால் பலரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் அன்பரின் ஆசை நிறைவேறுமா…? தமிழ் மக்களிற்கு விடியல் கிடைக்குமா, கிடைக்காதா பொறுத்திருந்து பார்ப்போமே மக்களே.

எனக்கென்ன என்று விட்டு விட்டு தங்களுடைய சுயநலம் தான் முக்கியம். நாடு கிடைத்தால் என்ன கிடைக்கா விட்டால் என்ன என்று இருக்கும் நம் மக்கள் மத்தியில் இப்படியும் மக்களுக்காக பாடுபடும் ஒரு உள்ளத்திற்காகவென்றாலும் தமிழனிற்கு நாடு கிடைக்க வேண்டி எல்லோரும் பிரார்த்திப்போமாக…

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

 

 

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!