ஆசிரியரின் துன்புறுத்தலில் இருந்து தப்புவதற்காக பொலீஸில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணிற்கு பொலீஸ் அதிகாரியின் வெறித்தனமான செயல்…

ஆசிரியர்கள் தான் நாட்டின் தூண்கள், மாணவர்களிற்கு பாதுகாவலர்கள். எல்லாமே ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதை தான். கொசோவோ நாட்டில் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் அந்த திருமணமான ஆசிரியருக்கு எதிராக குறித்த மாணவி புகார் அளிக்கும் பொருட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

அந்த மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அதிகாரி தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் குறித்த மாணவிக்கு தொல்லை அளித்து வந்துள்ளார் அது மட்டுமின்றி ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்த பொலிஸ் அதிகாரியின் அழைப்பை ஏற்க மறுத்த மாணவியை,

பாலியல் தொழிலாளி என விளம்பரப்படுத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். மாணவியின் குடியிருப்புக்கே சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த நிலையில் அதிகாரியுடன் செல்ல ஒப்புக்கொண்ட மாணவியை விடுதி ஒன்றுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

தொடர்ச்சியாக மிரட்டி ஓராண்டு காலம் பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி 15 ஆம் திகதி மாணவி கர்ப்பமான தகவல் வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைக்க வைத்துள்ளார். பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வந்த மாணவி ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதிலிருந்து மீண்ட அவர் இறுதியில் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து தமது நிலையை அவரிடம் விளக்கியுள்ளார்.

இந்த விவகாரம் பொலிஸ் வட்டாரத்தை உலுக்கிய நிலையில், கடந்த செவ்வாய் அன்று அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது இந்த விவகாரம் கொசோவோ நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஜனாதிபதி ஹாஷிம் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!