தாயின் கண்முன்னே 6 வயதுச் சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த நபர்…அதிர்ச்சியான காரணம்….!

சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்திற்குள் சென்றதாக கூறி 6 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தமது தாயாருடன் மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் தொழுகை கூடத்தில் சென்றுள்ளார். தொழுகை முடித்து மகனுடன் காரில் சென்ற தாயாரிடம் காரின் ஓட்டுனர் அவர்கள் ஷியா பிரிவினரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆம் எனத் தெரிவித்ததை அடுத்து காரை நிறுத்திய ட்ரைவர் சிறுவனை கீழே இழுத்து வீழ்த்தி அங்கிருந்த போத்தல் ஒன்றினை உடைத்து கூரான போத்தல் ஓட்டினால் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளான். இதனை நேரடியாக கண்ட சிறுவனின்  தாயார் சுயநினைவை இழந்துவிட்டார்.

தற்போது சிறுவனின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளத்தில் ஜகரியாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சவுதி அரசு இவ்விடயத் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!