வயதான பெண்ணை பணத்திற்காக திருமணம் புரிந்த இளைஞன் – போலி செய்தி பரப்பிய 4 பேர் கைது….!

வயதில் மூத்த பெண் ஒருவரை பணத்துக்காக இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியான நிலையில் அது பொய் தகவல் என்று அத் தம்பதிகளால் பொலிசில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த செய்தியைப் பரப்பிய நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் அனூப் செபஸ்டின் (29) இவருக்கும் ஜூபி ஜோசப் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இருவரின் புகைப்படங்களும் மலையாள பத்திரிக்கையின் திருமண நிகழ்வு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளிவந்த பின்னர் அனூப்புக்கும், ஜூபிக்கும் பல்வேறு நபர்களிடமிருந்தும் கேலிச் செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. அதாவது, ஜூபி தோற்றத்தை வைத்து அவர் 48 வயதான பெண் என்றும், அனூப் 25 வயதான ஆண் என்றும் சமூகவலைதலங்களில் இருவரின் புகைப்படத்தோடு செய்தி பரப்பப்பட்டது.

மேலும், ஜூபியின் ரூ.25 கோடி சொத்துக்கள் மற்றும் 101 சவரன் நகைக்காக தான் அனூப் வயதான பெண்ணான அவரை திருமணம் செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்திருந்தது. இந்த வதந்தியை பார்த்து தம்பதிகள் இருவரும் அதிர்ச்சியடைந்ததோடு வேதனையும் அடைந்தனர். வேண்டுமென்றே சில விஷமிகள் இப்படியான செய்தியை பரப்பியதை அவர்கள் அறிந்துகொண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில் 4 பேர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!