யாழில் சட்டத்தைக் கையிலெடுத்த இளைஞர்கள்… திருட்டு சந்தேக நபருக்கு இளைஞர்கள் வழங்கிய தண்டனை…!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை என்று சமூகவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. இந் நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மறுபுறத்தில் இச் சம்பவங்களுக்கான பின்னணி குறித்தும் பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனங்களும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. சமூகவிரோதச் செயல்களும் கட்டுப்பாடின்றி நடந்தேறுகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளைஞரிகளிடம் சிக்கியுள்ளார்.

குறித்த இளைஞனை கடுமையாகத் தாக்கிய இளைஞர் குழு அவர் கழுத்தில் பதாகை ஒன்றைத் தொங்கவிட்டு ஊர்லமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தை பலர் காணொளியாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இச் சம்பவம் அங்கு சட்டம் நீதி குலைந்துள்ள தன்மையையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
“புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!