சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான இறுதிச் சமரில் அமெரிக்கா….!

சில வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே தெரிவிக்கும் அளவுக்கு அவர்களின் செயல் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை தோற்கடிப்பது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான செயல் என்பதால்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் தரையிறக்கப்பட்டன. உள்நாட்டுப் படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.அவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன.

பல நகரங்கள் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்ட போதிலும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. வின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். எனினும் அங்கு தொடர்ந்தும் போர் இடம் பெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் அவ் அறிவிப்பு வெளிவரும் என்று ட்ரம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது. அங்கிருந்த 20 ஆயிரம் பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!