இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

Today rasi palan - 12.02.2019,

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். இன்றைய பஞ்சாங்கம்
12-02-2019, தை 29, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 03.54 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பரணி நட்சத்திரம் இரவு 10.10 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரதசப்தமி விரதம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம்12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேஷராசி நேயர்களே: இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில்வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகைகைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடுசெயல்படுவார்கள்.

ரிஷபராசி அன்பர்களே: அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுனராசி காரர்களே. எண்ணமும், செயலும் உற்சாகம் பெறும். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகி வளரும். தொழில், வியாபார இலக்கு எளிதில் பூர்த்தியாகும். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

கடகராசி நேயர்களே:. புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். நம்பிக்கைக் குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துபேசுவார்கள். மதிப்புக்கூடும் நாள்.

சிம்மராசி அன்பர்களே: இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள்உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்லமுன்னேற்றத்தை காணலாம்.

கன்னி ராசி காரர்களே: காலையில் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

துலாராசி உறவுகளே: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்துக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
.

விருச்சிகராசி நேயர்களே: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் புதிய முயற்சிகளுக்கு இடமுண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். மிகவும் சிறப்பான நாள்.

தனுசுராசி அன்பர்களே: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும்முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கையிருப்பு சற்று குறையும்.

மகரராசி காரர்களே: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கும்பராசி உறவுகளே: பிறர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைத்து மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மீனராசி நேயர்களே: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியா பாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான நாள்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!