வீட்டில் எலி் தொல்லை அதிகமா ? இந்த இலையை மட்டும் வையுங்கள்… எலி வீட்டுப் பக்கமே வராது…!

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றும் புரட்சி வானொலியின் செய்திகளில் மருத்து குறிப்புகள், சமையல் குறிப்புகள், உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள் என அனைத்தும் உங்களை நாடி வருகின்றது. இன்றைய சூப்பர் டிப்ஸ் பகுதியில் நாம் பார்க்க இருப்பது எலி தொல்லைக்கு தீர்வு தான். கொசு, பல்லி இவற்றை விட அதிகம் தொல்லை கொடுப்பது இந்த எலிகள் தான். இதன் கொடுமை எப்படி இருக்கும் என்றால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து நாம் வாங்கும் பொருளை நொடியில் கடித்து வீசிவிடும். துணியாக இருக்கட்டும், உணவு பொருட்களாக இருக்கட்டும் ஏன் விலை உயர்ந்த புத்தகங்கள் ஓவியங்களை கூட அசால்டாக கடித்துவிட்டு

சென்று விடுகிறது. எலியை விரட்ட இன்று இரண்டு விதமான இலைகளை நாம் பயன்படுத்த போகின்றோம்.
முதலாவது இலை நொச்சி இலை. இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய. இதனை அதிக சளி தலை பாரம் இருந்தால் ஆவி பிடிக்க பயன்படுத்துவார்கள்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதனை வேலிகள் சிலர் வளர்ப்பார்கள். ஆனால் எல்லா இடத்திலும் இந்த நொச்சி இலையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த இலையை எலி வரும் இடத்தில் வைத்துவிடுங்கள். ஆகக் குறந்தது மூன்று நாட்கள் வீட்டில் எந்த இடத்திற்கு எலி வருகிறதோ அங்கு வைக்கலாம்.

அதன் பின் எடுத்துவிடுங்கள் அந்த ஏரியாவிற்கு எலி வரவே வராது. அடுத்து எருக்கம் இலை. இதற்கு எந்த பூச்சிகளுமே வராது. எலியும் தான் இந்த இலையையும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு புதிய இலைகளை மாற்றி வையுங்கள். அவ்வளவு தான் எலி ஓடியே போய் விடும். இந்த இரண்டு இலைககாலும் எந்த பாதிப்பும் யாருக்கும் வராது. இவை இரண்டுமே மூலிகை செடிகள் தான்..!

error: Alert: Content is protected !!