யாருடனும் அருகில் நின்று பேச முடியாத அளவிற்கு வாய் துர்நாற்றமா? இனி மெளத் வாஷ் வேண்டாம்..நொடியில் தீர்வு..!

வாய் துர்நாற்றம் “இது கொடுக்கும் தொல்லைக்கு அளவு கிடையாது. எமக்கு வாய் துர்நாற்றம் வீசுவது தெரியாது ஆனால் அருகில் இருப்பவர்கள் முகத்தை சுழிக்கும் போது, சிலர் எம் முகத்தை பார்த்து பேசாமல் வேறு பக்கம் திரும்பி கொள்ளும் போது. சிலர் மூக்கை மூடும் போது, ஏன் இன்னும் சிலர் உங்கள் வாய் சரியான நாற்றம் என்று சொல்லும் போது தான் தலை குனிவு ஏற்படுகின்றது. இன்று பலருக்கு இருக்கும் தொல்லை இது தான். இது பெரும்பாலும் அல்சரால் ஏற்படுகின்றது. வயிற்றில் புண் இருந்தால் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றது. இதற்கு முதல் காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம். அத்துடன் வாய் துர்நாற்றம் இல்லாமல் செய்வதற்கு என்ன செய்யலாம் என பார்க்கலாம்.எல்லாவற்றையும் விட சிறந்த மருந்து யாதெனில் நல்லெண்ணை தான். காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதற்கு முன்பு இரண்டு கரண்டி நல்லெண்ணை வாயில் விட்டு 2 தொடக்கம் மூன்று நிமிடம் வரை வாயை கழுவுங்கள்.

பின்பு அதனை துப்பிவிடுங்கள். வயிற்றுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். பின்பு வழக்கம் போல் பிரஷ் செய்யுங்கள். இப்படி தொடர்ந்து ஒரு 10 நாட்கள் செய்து வந்தாலே மெளத் வாஷ் வாங்கும் காசு மிச்சமாகிவிடும். அதே போல் கராம்பு . கராம்பு சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை காலை உணவு எடுத்துக் கொண்ட பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் மிக்ஸ் செய்து சாப்பிட்டு விடுங்கள். இதை ஒரு மூன்று நாட்கள் செய்தாலே போதுமானது. வாய் நாற்றம் ஓடிவிடும். இவற்றை செய்ய முடியாதவர்கள் எல்லா இடமும் இலகுவாக கிடைக்க கூடிய கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள் .. காலை பாதி, அதே போல் மாலை நேரத்தில் பாதி சாப்பிட்டு வாருங்கள் வாய் நாற்றம் பக்கம் கூட வராது.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!