சுதந்திர தினத்தில் கால்வாயுக்குள் கதறிய சுதந்திரம்..! கண்ணீருடன் சொல்லும் கீதா..! வீடியோ இணைப்பு..!

கடந்த சுதந்திர தினத்தன்று பலரையும் கண் கலங்க வைத்த செயல் தான் சுதந்திரத்தின் வருகை. சுதந்திரம் கால்வாயுக்குள் கதறி அழுத நேரம். என்னடா என்று யோசிக்காதீங்க.. இரண்டு இச்சை மிருகங்களின் செயலால் உலகை கண்டவர் தான் இந்த சுதந்திரம். பிறந்ததுமே கால்வாய்க்குள் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் பெற்றவர்கள், சேற்றுத் தண்ணீரில் வீறிட்டு அழத குழந்தையின் குரல் கேட்டு பதறிபோய் கால்வாயுக்குள் கையை விட்டு குழந்தையை வெளியே எடுத்தவர் தான் கீதா.! அன்று இந்த கீதா இல்லாவிட்டால் அந்த குழந்தை மரணித்து போய் இருக்கும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

பேஸ்புக்கில் Like செய்ய!!

குழந்தையை கையில் எடுத்ததும் எதை பற்றியும் யோசிக்காமல் முதலுதவி செய்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினார். குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு கீதாவிற்கு செல்ல சுதந்திர தினத்தன்று சுதந்திர தேவியால் அனுப்பப் பட்ட குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயரிட்டார் கீதா.

இது பற்றி அவர் கூறுகையில்.. நானும் ஒரு அனாதை தான். என் அம்மா அப்பாவும் என்னை போட்டுவிட்டு சென்று விட்டார்கள். உறவினர்களிடம் வளர்ந்தேன். என் அம்மா என் கன்னத்தை கிள்ள வேண்டும்..கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆயிரம் கனவுகள் கண்டேன் எனக்கு அம்மாவின் பாசம் கிடைக்கவே இல்லை.

சுதந்திரத்தின் வலி எனக்கு நன்றாகவே புரியும். நான் ஒரு பாசத்தின் அடிமை. யாராவது எனக்கு பாசம் காட்டினால் அந்த பாசத்திற்கு அடிமையாகிவிடுவேன் என கூறி கண் கலங்கினார். அத்துடன் இது நாள் வரை சுதந்திரம் என் கண் முன் தான் இருந்தார். இப்போது யாரோ ஒருவருடைய வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்கிறாராம். எனக்கு எங்கே என்று சொல்ல மறுக்கிறார்கள்..

என கூறிய கீதாவிற்கு அரசு தற்போது அரசாங்க வேலை கொடுத்துள்ளது. சுதந்திரம் அதிர்ஷ்டகாரர். என கூறும் கீதா..இன்னும் 15 அல்லது 20 வயதில் என் சுதந்திரம் என்னை பாட்டி என்று தேடி வருவார் பாருங்கள் அவருக்காக பாட்டி நான் காத்திருப்பேன் என கூறியுள்ளார்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!