தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவால் மீண்டும் வெற்றிப் படியேறிய ரணில்…

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5ம் திகதி முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.இந்த வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் ஜ.தே.கட்சியினர் பேசியிருந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த வாக்கெடுப்பின் போது, 119 வாக்குகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளன. இவ் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 77 வாக்களிக்கப்பட்டுள்ளது.இதன்மூலமாக வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் வெற்றியடைந்துள்ளது.

 

மகிந்த தரப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் இத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.மக்கள் விடுதலை முன்னணியினரும் மகிந்த மற்றும் மைத்திரி அணியினரும் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!