இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம். 13-03-2019, மாசி 29, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.23 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

மேஷராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

ரிஷபராசி அன்பர்களே:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும், மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மிதுனராசி காரர்களே:மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.. உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். லேசாக தலை வலிக்கும்,பகைவரிடம் இருந்து விலகுவது நல்லது. கடன் பிரச்சினை தீரும்.

கடகராசி நேயர்களே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார்.பணப்புழக்கம் அதிகமாகும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மராசி அன்பர்களே:நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்-. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கொடுத்த கடன்கள் வசூலாகும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்

கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

துலாராசி உறவுகளே:உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.

விருச்சிகராசி நேயர்களே:குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

தனுசுராசி அன்பர்களே: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகும்.

மகரராசி காரர்களே:குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.

கும்பராசி உறவுகளே:பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும்.பலவீனமாக காணப்படுவீர்கள். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவால் கரையும். உடல்நலனில் அக்கறை தேவை.

மீனராசி நேயர்களே:மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.அரசால் ஆதாயம் உண்டு. சொத்து சிக்கலில் சுமூக தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!