விமான நிலையத்தில் குழந்தையை மறந்து போய் விமானத்தில் புறப்பட்ட தாய் – விமானி செய்த மனித நேய செயல்…!

மறதி என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு ஏற்படுகின்ற மறதி மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. அவ்வாறு ஓர் மறதி தான் அரேபியப் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. பிரயாணங்களில் நாம் கொண்டு செல்லும் பயணப் பொதிகளை மறந்து விடுவதென்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் பிள்ளையை அல்லவா இந்தப் பெண் விமான நிலையத்தில் மறந்து போய் விட்டுச் சென்றுள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டாக் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் இருந்த பெண் ஒருவர் விமானம் புறப்பட்டதும் அழுதுள்ளார். பணியாளர்கள் வினவியபோது தனது குழந்தையை விமான நிலையத்தில் மறந்து போய் விட்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் உடனடியாக மீண்டும் புறப்பட்ட விமானத் தளத்திற்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறே சில மாதங்களுக்கு முன் கடையொன்றின் மேசையில் தமது குழந்தையை கிடத்திவிட்டு உணவருந்திய பின் குழந்தையை மறந்து விட்டுவிட்டு மலேசிய தம்பதியினர் வீடு திரும்பியிருந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!