இந்தியாவுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு தொடர்ந்து தடை போடும் சீனா…!

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் சீனா அதனை நிறைவேற விடாமல் தடுத்து விட்டது. சீனாவுக்கு இருக்கின்ற வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே இதனை சீனா மேற்கொள்கின்றது. உலக நாடுகள் அனைத்தும் புல்வாமா தாக்குதலுக்கு எதிராக அறிக்கைகள், கண்டனங்கள் வெளியிட்டிருந்த போதிலும் சீனா குறித்த பயங்கரவாத இயக்கத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுவதில் தவறிவிட்டது.

தற்போது மீண்டும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி பிரான்ஸ்சால் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் வீட்டோ அதிகாரத்தோடு இருக்கும் சீனா அதனை எதிர்த்தால் நிச்சயம் இம்முறையும் முயற்சி பலிக்காது போகும்.

பெரும்பாலும் சீனா இம்முறையும் அத் தீர்மானம் நிறைவேற விடாமல் தடுக்கவே செய்யும் என்று எதிர்வு கூறப்படுகின்ற நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரிக்கையை அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!