பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தாதா, பெண்ணின் உண்மை நிலை அம்பலமானது …

பெங்களுருவின் பிரபல தாதா லக்ஷ்மணப்பா பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் பின்னணி காரணமாக அமைந்துள்ளது. தாதாவின் வீட்டருகே வசித்து வந்த கமலி, தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.சிறு வயது முதலே லக்ஷ்மணப்பாவுக்கு கமலியை நன்றாக தெரியும். லஷ்மணப்பா திருமணத்தில் கூட கமலி, சிறுமியாக இருந்தபோது கலந்துகொண்டுள்ளார்.

பெரியவளான கமலிக்கு நடனப்பள்ளி ஆசிரியருடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது,இதையறிந்த கமலியின் தந்தை தாதாவின் உதவியை நாடியுள்ளார், அவர் கமலியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தானே பணம் செலுத்தி அனுப்பி வைத்துள்ளார், கமலியின் படிப்பிற்காகவும் லட்சக்கணக்கான பணத்தினை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் கமலி மீது ஆசைப்பட்ட தாதா காதல் வயப்பட்டுள்ளார். கமலி தன் காதலர் ருபேஷ்வுடனனா காதலைக் கைவிட மறுத்தார். அதேவேளையில், லக்ஷ்மணா அனுப்பும் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.இதற்கிடையில் ருபேஷிற்கு 1 லட்சம் ரூபாய் பணம் அனுப்பி வைத்து,

அந்த பணத்தினை வைத்து கூலிப்படையை ஏவி லஷ்மணப்பாவை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் கமலி.அத்தோடு தாதாவிடம் இங்கிலாந்தில் இருந்து வருவதாக பொய் கூறி ஹோட்டல் புக் செய்ய கூறியதோடு மட்டுமல்லாமல் எந்த சாலை வழியாக என்னை பார்க்க வருகிறீர்கள் என்ற விவரத்தை கேட்டு, அதனை தனது காதலனிடம் தெரிவித்து கொலையை கச்சிதமாக முடித்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!