மலேசியாவின் ஜோகூர் பகுதியில் நச்சு வாயுத் தாக்கம் – 35 பள்ளிகள் வரையில் முடப்பட்டது…!

மலேசியாவின் ஜோகூர் சுங்கை கிம்கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இரசாயனக் கழிவுப் பொருட்களால் அப்பகுதியில் பரவிய நச்சு வாயுத் தாக்கத்தால் அப் பகுதிகளில் காணப்பட்ட பள்ளிகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்க நிலைக்கு உள்ளாகியதால் அங்கு 35 வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாசீர் கூடாங் பகுதியில் நேற்று 9 பள்ளிகளும் இன்று 25 பள்ளிகளுமாக மொத்தம் 34 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் 10 ஆயிரம் வரையிலான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

மாணவர்கள் மத்தியில் பரவிய வாந்தி மற்றும் மயக்க நிலை காரணமாக கிட்டத்தட்ட ஐந்நூறு வரையிலான மாணவர்கள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

பிந்திய தகவல்களின் படி ஆற்றில் நச்சுக் கழிவுகளைக் கொட்டியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத ரயர் மீள்சுழற்சி மையங்களில் பயன்படுத்தப்பட்ட இரசாயனக் கழிவுகளே அங்கு கொட்டப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!