கணவருக்குத் தாலி கட்டிய மனைவி…

சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் கர்நாடகாவில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரண்டு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதமாட்டார்கள்.

கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்றவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள். இங்கு பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என கருதப்படுவதால், தாலி காட்டும் முறை கூட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமித் -பிரியா. பிரபுரா- அங்கிதா ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமணத்தில் இரண்டு மணப்பெண்களும் தங்களுடைய கணவருக்கு முதல் தாலி கட்டி அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!