கழிவறையில் குழந்தை பெற்று வீசிச் சென்ற தாய்…

கடும் குடி போதையிலிருந்த பெண்ணொருவர் கழிப்பறையில் குழந்தை பெற்று குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவமானது ரஷ்யாவில் நடந்தேறியுள்ளது, யுலியா என்ற பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தனது வீட்டில் மது விருந்து நடத்தியுள்ளார். இதில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய யுலியா சிறிது நேரத்தில் கழிப்பறை சென்றுள்ளார், அங்கே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதைப் பார்த்த சிலர் அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்,

குழந்தையின் சில அங்கங்கள் செயலிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, அதனைத் தொடர்ந்து பொலிசார் யுலியாவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!