இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம்.இன்றைய பஞ்சாங்கம், 14-03-2019, மாசி 30, வியாழக்கிழமை, அஷ்டமி திதி இரவு 03.21 வரை பின்பு வளர்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.42 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. காருடையான் நோன்பு பின் இரவு 04.00 மணி முதல் 05.00 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

மேஷராசி நேயர்களே: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.

ரிஷபராசி அன்பர்களே:தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்.இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.

மிதுனராசி காரர்களே:குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகராசி நேயர்களே:வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மராசி அன்பர்களே:பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் ஆலோச னையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி காரர்களே:வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாராசி உறவுகளே:நண்பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால்..குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகராசி நேயர்களே:மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.மாலை 04.57 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

தனுசுராசி அன்பர்களே:மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

மகரராசி காரர்களே:அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.பயணத்தின்போது கவனமாக இருக்கவும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

கும்பராசி உறவுகளே:திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும்.

மீனராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!