கொள்ளைப் பொருளாதார முறையை நோக்கி நகரும் சீனா – சிக்கிக் கொண்ட இலங்கை – அமெரிக்காவின் எச்சரிக்கை…!

நாடு ஒன்றின் அபிவிருத்திக்கு என்று நிதி வழங்குவதும் பின்னர் அந்த கடனை சாதகமாக்கி அந்நாட்டினை தனது இராணுவ நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்வதும் என ஓர் கொள்ளை ரீதியான நடைமுறையை சீனா பின்பற்றுவதாக அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்டர்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செனட் சபையில் இராணுவப் படைகள் தொடர்பான குழு முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்கு நிதியுதவி வழங்கிய சீனா பின்னர் அந்தக் கடனைக் காரணம் காட்டி அத் துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொண்டமை ஓர் உதாரணம் என்று தெரிவித்துள்ள அவர்

பேஸ்புக்கில் Like செய்ய!!

இவ்வாறே பாகிஸ்தானுடன் கடல் ஊடாக தரைவழிப் பாதையை அமைக்கும் நோக்கில் 10 பில்லியன் டொலர் கடன் நிதியை வழங்கி பிராந்திய முக்கியத்துவமுடைய ஹிக்வாடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வருவதாகவும் தனது நலனை முன்னிறுத்திய நோக்கிலேயே இந் நடவடிக்கையை சீனா முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சீனாவானது இந்திய – பசுபிக் கடல் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எதிர்பார்த்துள்ளது என்றும் இச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பலத்த சவாலாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!