நியூசிலாந்து படுகொலையிலிருந்து நூலிழையில் தப்பிக்கொண்ட பங்களாதேஸ் அணி வீரர்கள்…!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து நபர் ஒருவர் நடாத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த சம்பவத்தை அந் நபர் தனது தலைக் கவசத்தில் பொருத்தியிருந்த நவீன கமெரா மூலம் பேஸ்புக் தளத்தில் நேரலையாகப் பதிவிட்டிருந்தமை உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் அச் சம்பவத்தில் நூலிழையில் உயிர் தப்பிப் பிழைத்த பங்களாதேஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தமீம் இக்பால் அச் சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

தங்கள் அணி வீரர்கள் மூவர் சம்பவம் நடைபெற்ற மசூதிக்குச்செல்வதற்கு திட்டமிட்டு பயண நேரத்தில் மகமதுல்லா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்குச் சென்றுவிட்டாதால் தாமதமாகவே அங்கு புறப்பட்டுச் சென்றதாகவும் , பேரூந்து மசூதி அருகில் சென்ற போது அங்கே சிலர் சரிந்து விழுவதை அவதானித்ததாகவும் அவர்கள் போதையில் தள்ளாடுவதாக நினைத்து தாம் அவ்விடத்தை அடைந்த போது இன்னொருவர் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்ததாகவும் கூறியுள்ளார்.

 

அந்நேரம் அப்பகுதியால் ஓடி வந்த பெண்ணிடம் கேட்டு நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்துகொண்ட போதிலும் பேரூந்தை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலையில் சுமார் 7 நிமிடங்கள் வரையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு அந்த பஸ்ஸினுள் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

அங்கு அதிரடிப் படையினர் வந்த பின்னரே தாம் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடியதாகவும் எனினும் தாம் ஓடுவதைப் பார்த்து அதிரடிப்படை வீரர்கள் தப்பாக நினைத்துவிடக்கூடாது என்று எண்ணி சற்றுத் தூரம் கடந்ததும் நடந்து சென்றதாகவும் அந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி விபரிக்கும் தமீம் இக்பால், முப்பது செக்கன்ட் நிலைமை மாறியிருந்தால் தங்களது உடல்களும் விமானத்தில் ஏறியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!