இலங்கை அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு – சட்டத்தரணிகள் நால்வர் மனு…!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று உயர் நீிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கினை சிரேஸ்ட சட்டத்தரணிகள், லால் விஜேநாயக்க, சுனில் ஜயரத்ன, லக்ஷ்மன் ஜோதிகுமார், நாமல் ராஜபக்ச ஆகிய
நால்வரும் சேர்ந்து முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதன் காரத்தால் ,

தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர்களது மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியின்றி மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக தீபாலி விஜேசுந்தர 14 நாட்களுக்கு ஒரு தடவை பணியில் நீடிக்கப்படுகின்றமை அரசியலமைப்பின் சில சரத்துக்களுக்கு முரணானது என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இவ் வழக்கின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!