பேன் கடி, மற்றும் தலையை ஈறு அசிங்க படுத்துகிறதா? இதை பூசுங்கள் வாழ்க்கையில் பேன் வராது..!

புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகளில் இன்று நாம் பார்க்கப் போவது தலையில் இருந்து தொல்லை கொடுக்கும் பேன்களை விரட்டுவது அல்லது கொட்ட வைப்பது எப்படி என்று தான் இன்று பார்க்கப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் 100ml.

ஆரத்தி கற்பூரம் மூன்று வில்லைகள். எலுமிச்சை ஜூஸ் 100 ml . பூண்டு 8 பற்கள். இவற்றை கொண்டு எப்படி இந்த மருத்துவத்தை செய்வதென பார்க்கலாம்.முதலில் பூண்டை சிறியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் கற்பூரத்தை தூளாக்கிக் கொள்ளுங்கள்.

100ml எண்ணெயில் பூண்டு மற்றும் கற்பூரத்தை மிக்ஸ் செய்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வைய்யுங்கள். பின் அதனை இறக்கு 10 நிமிடம் வரை நன்றாக ஆற வைத்து வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். வடித்த எண்ணெயுடன் எலுமிச்சை சாறை கலந்து நன்றாக மிக்ஸ் செய்தால் மருந்து தயார்.

இதனை நன்றாக தலை முழுவதும் பூசி துணி ஒன்றினால் கட்டி விடுங்கள். பேன் மற்றும் ஈறு அனைத்துமே கொட்டிவிடும். பின் குளியுங்கள். இதனை அனைவரும் பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவுகளும் வரவே வராது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!