மூன்று கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளை இடுப்பில் மறைத்துக் கடத்திய நபர் கட்டுநாயக்கவில் கைது…!

கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .அவர் தனது இடுப்புப் பட்டியில் சுமார் மூன்று கோடிகள் பெறுமதியான 40 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்குள் கடத்தி வந்த நிலையிலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பொலிசாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த 24 கரட் தரத்திலான 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்கக் கட்டிகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் எலும்பு முறிவு நோயாளிகள் சிகிச்சைக்காக கட்டும் இடுப்புப் பட்டியில் மறைத்துவைத்தே தங்க கட்டிகளை நாட்டிற்குள் கடத்தி வந்துள்ளார்.

சென்னையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த விமானத்திலேயே இத் தங்க கட்டிகள் கடத்திவரப்பட்டுள்ளன. இத் தகவல்கள் சுங்க திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டியவினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!