உங்கள் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ இணையத்தில் வெளியானாலோ அல்லது யாரேனும் வைத்திருந்தாலோ உடனே இதை செய்யுங்கள்..தயவு செய்து அதிகம் பகிருங்கள்..!

இன்று பலரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் விடயம் தான் ஆபாச புகைப்படங்கள் இணையங்களில் கசிவது அல்லது ஆபாச வீடியோக்கள் வெளியாவது. இதற்கான காரணம் நாம் நம்பி சென்றவர்கள் ஏமாற்றுவது, அல்லது கூடவே இருந்த நண்பர்கள் பணத்திற்காக செய்வது, அல்லது வெளியில் கேமராங்கள் வைத்து எமது அந்தரங்கத்தை வீடியோ எடுப்பது போன்றவை ஆகும்.

அடுத்து எமது தொலைபேசிகளில் செல்பி என்ற பெயரில் எமது அந்தரங்க புகைப்படங்களை சேமித்து வைப்பது போன்றவையாகும். எமது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள் சில நேரம் மொபைல் கை மாறும் போது எடுத்து விடுவார்கள். இவை ஏதேனும் இணையங்களில் வெளியாகி விட்டால் நீங்கள் கவலை படுவதாலோ தற்கொலை செய்துகொள்வதாலோ எதுவும் நடக்கப் போவதில்லை. அதற்கு இருக்கும் தீர்வு நீங்கள் நிதானமாக செயற்படுவதாகும்.

உங்கள் புகைப்படங்கள் ஏதேனும் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தால் உடனடியாக அந்த சைட்டின் பெயருடன் பதிவேற்றப் பட்டிருக்கும் புகைப்படத்தையும் ஸ்கிரீன் சாட் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் அதன் url லிங்கையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நிதானமாக சிந்தியுங்கள் உங்கள் சார்ந்தவர் அல்லது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவருக்கு இவற்றை கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். உங்கள் அனுமதி இன்றி உங்கள் புகைப்படம் அல்லது வீடியோ எவரும் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் அது தண்டனைகுறிய குற்றமாகும்.

அதனால் யாரேனும் உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை வைத்திருந்தாலும் உடனடியாக புகார் கொடுங்கள். பயப்பிடவோ பணம் கொடுக்கவோ வேண்டாம். உடனடியாக இவற்றை செய்தால் போதுமானது. அதிகம் பகிருங்கள்..!

error: Alert: Content is protected !!