16 வயதில் விமானியான பிரித்தானியப் பெண்…(வீடியோ)

மிகச் சிறிய வயதில் பிரபல விமான நிறுவனத்திற்கு விமானியாக சேர்ந்துள்ளார். பதினாறு  வயதான இந்த  இளம்பெண் பிரித்தானியாவிலேயே குறைந்த வயதுள்ள விமானி என்று கருதப்படுகின்றார். Ellie Carter என்னும் அந்த இளம்பெண், ஜனவரி மாதம் தனது 16 ஆவது பிறந்த நாள் முடிந்து மூன்றே நாட்கள் ஆன நிலையில், ஒரு எளிய வகை விமானம் ஒன்றை தனியாக இயக்கியுள்ளார். Ellie Carterக்கு தொடர்ந்து மூத்த பெண் விமானி ஒருவரால் பெரிய விமானங்களை இயக்கவும் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.

இவர் தனியாக விமானம் இயக்கியதையிட்டு அந்த விமான நிறுவனம் இந்த முடிவை எடுத்தது மட்டுமன்றி இன்னும் பல இளம்பெண்கள் விமானி பணிக்கு வரவேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

உலகத்திலேயே மொத்தம் 5 சதவிகிதம் பெண்கள் தான் விமானிகளாக பணி செய்ய ஆர்வத்தில் உள்ளார்கள், இத்தகைய ஆர்வமுடைய இளம் விமானியை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவருக்கு பயிற்சியளிக்கும் Zoe Ebrey என்னும் மூத்த விமானி, தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

 

error: Alert: Content is protected !!