கோத்தபாய களமிறங்கினால் தோல்வி நிச்சயம், அடித்துக் கூறும் ரணில்…

வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது. இந் நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி தீர்மானித்துள்ளது,  என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினாவியுள்ளது, அதற்கு அவர்  மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் இனி வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஜனாதிபதித் தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராகவுள்ளோம் . எமது வெற்றி உறுதி. அரசியல் சதியூடாக நாம் ஆட்சி நடத்தவில்லை. மக்களின் ஆசியோடு ஆட்சி நடத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!