போலி ஆவணங்களுடன் கட்டுநாயக்காவில் இரு பெண்கள் கைது…

போலிக் கடவுச் சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்ப்பட்ட பெண்கள் இருவரை கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை ஏமாற்ற முயற்சித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.போலி தகவல் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்கள் இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒரு பெண் கடந்த 13ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் செல்வதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கடவுச்சீட்டை சோதனையிட்ட போது அதில் போலி இந்திய விசா ஒட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அவரின் உடமைகளைச் சோதனையிட்டபோது குவைத் விசா மற்றும் 3 விமான டிக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்தப் பெண்கள் வெளிநாட்டில் பணிக்குச் செல்வதற்காக இப்படி அத்து மீறிச் செல்ல முற்ப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த இரண்டு பெண்களிடமும் திவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!