பிரித்தானிய குடும்பம் ஒன்றின் சோகத்தை வெளிப்படுத்திய 11 வயதுச் சிறுமியின் கடிதம்….!

பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் தனது குடும்ப நிலை தொடர்பாக அந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ்-க்கு 11 வயது சிறுமி ஒருவர் தனது குடும்ப நிலை குறித்து மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்து அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அச் சிறுமிக்கு எப்படி உதவலாம் என கேட்டுள்ளார்.

குறித்த சிறுமி ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட சிறிய பிளாட்ஒன்றில் 7 பேருடன் தான் வாழ்ந்து வருவதாகவும், தனது இரண்டு மூத்த சகோதரிகளுடன் தான் உறங்குவதாகவும் எழுதியுள்ள சிறுமி அதிகாலையிலேயே பேவைக்குப் புறப்படும் தந்தை போடும் லைட்டால் தனது தூக்கம் கலைந்து விடுகின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வு நடக்கவுள்ள நிலையில் அதில் தன்னால் முழுக் கவனமும் செலுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றார். தினசரி தனது தாய் அழுவதாகவும் அதனைப்பார்த்து தானும் அழுவதாகவும் தெரிவிக்கும் சிறுமி நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களில் கூடத் தான் கலந்து கொள்வதில்லை எனவும் அவ்வாறு கலந்து கொள்ளும் போது தானும் அவர்களை தனது பிறந்த நாளுக்கு அழைக்க வேண்டும் எனவும் ஆனால் அதற்கான இடவசதி தனது வீட்டில் இல்லை என்றும் ஆதங்கப்படுகின்றார்.

சிறுமியின் கடிதம் குறித்து தான் விரையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!