ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்குமாம்….!

ஜெனிவாவில் 40 ஆவது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கை தொடர்பாக பிரேரனை ஒன்று கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது குறித்து விவாதங்கள் நடக்கும் நிலையில் அத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதிகிடைப்பதற்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலோயே அந் நாட்டு பாராளுமன்றக் குழு ஒன்றினால் இச் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இத் தகவல் குறித்து பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சியின் எம்.பி.ரொபர்ட் ஹல்ஃபோன் கூறும்போது தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தாம் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

முன்னதாக இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பிரித்தானிய அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் தெரிவித்திருந்த நிலையிலேயே பாராளுமன்றக் குழு ஒன்று தமது ஆதரவைத் தமிழ் மக்களுக்காக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!