ஜெனிவாவில் பசுமைத் தாயகம் ஏற்பாடு செய்த கூட்டத்திலிருந்து வெளியேறிய சரத் வீசேகர தலைமையிலான குழு….!

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு குழு அஅறையில் இடம்பெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன் மற்றும் சிவாஜிலிங்கம், புலம்பெயர் அமைப்புக்களின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாதிரியார் இம்மானுவேல், தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகள், பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றுடன் இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினைச் சேர்ந்த சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக் குழுக் கூட்டம் பசுமைத் தாயக அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பித்திருந்த நில மணித்தியாலங்களில் இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பிற்கும், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்தில் இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும், குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது என்று எதிர் வாதம் செய்த நிலையில் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் கூட்டத்திலிருந்து இடையிலேயே வெளியேறிச் செய்திருந்தனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!