இலங்கை தேசியப் பிரச்சனைத் தீர்வுக்குத் தடையாகவுள்ள வட பகுதியின் சாதிப் பிரச்சனை – ஜனாதிபதி தெரிவிப்பு….!

இலங்கையின் வட பகுதியில் காணப்படுகின்ற சாதி பிரச்சனையே இலங்கையின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வுகளை முன்வைப்பதற்குத் தடையாக விளங்குகின்றது என்று தெரிவித்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடியதாகவும், அப்போது கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சிக் காலப் பகுதியில் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட விதம் தொடர்பாக ஆளையாளர் திருப்தியா எனத் தன்னிடம் வினவியதாகவும்,

தான் அளித்த பதிலில் 50 வீதம் திருப்தி எனத் தெரிவித்திருந்த போதும் வடபகுதியில் நிலவுகின்ற சாதிப் பிரச்சனையே இலங்கையின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தடையாக இருக்கின்றதென விளக்கி கூறியதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!