பூட்டிய வீட்டினுள் ஜன்னலால் எட்டிப் பார்த்த அயலவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி…!

வீடு ஒன்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி பிள்ளைகள் என நால்வர் இறந்து கிடந்துள்ள சம்பவம் ஒன்று ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திராவின் குன்னூர் மாவட்டத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப் பகுதியைச் சேர்ந்த ஜானி (28 வயது), மனைவி வசந்தா (25 வயது) பிள்ளைகளான் ராமலட்சுமி (7 வயது), ராஜேஸ் ( 5 வயது ) ஆகியோரே இவ்வாறு அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

நாள் முழுவதும் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் சந்தேகம் கொண்ட அயல் வீட்டார் ஜன்னல் ஊடாக வீட்டினுள் எட்டிப் பார்த்த போது வீட்டினுள் நால்வரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார். இச் சம்பவத்தால் அதிர்ந்து போன அவர் உடனடியாகப் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து நால்வரின் உடலையும் கைப்பற்றி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந் நிலையில் பிள்ளைகளைத் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தபின்னர் கணவன் மனைவி இருவரும் தூக்கு மாட்டி இறந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!