இந்திய தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை…!

இந்தியாவில் லோக் சபா தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளும் இத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதற்காக கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் முனைப்புடன் ஈடுபடுகின்றன. பெருட் கூட்டணியாக இம் முறைத் தேர்தலை இரு பெரும் கட்சிகளும் எதிர்கொள்வதால் இத் தேர்தல் அமர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் காலங்களில் மக்களை கவர்வதற்காக தமிழக கட்சிகள் எடுக்கும் ஆயுதங்களில் இலங்கை பிரச்சனை தொடர்பான விடயங்களும் அடங்கும். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இரு விடயங்களாக – ராஜீவ் கொலைச் சம்பவம் , கச்சதீவு மீனவர் பிரச்சனை என்பன இம் முறையும் தேர்தல் களத்தில் அடிபடத் தொடங்கியிருக்கின்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு நீதி வேண்டும், ராஜீவ் கொலை வழக்கில் 7 கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், கச்சதீவில் இந்திய மீனவர்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க கிளம்பியிருக்கும் நிலையில், தி.மு.க தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!