நடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..! சோகத்தில் குடும்பம்..!

நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் 16 வயதில் அறிமுகமானவர், கதாநாயகி, தோழி,அக்கா, அண்ணி, என ஆரம்பித்து வில்லியாகவும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மகளுக்கு உதவியாக மகள் வீட்டில் தங்கியுள்ளார்.

வடிவுக்கரசியின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது. மகளிடம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு வந்த வடிவுக் கரசிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வீட்டின் பூட்டு மற்றும் ஜன்னல் உடைக்கப் பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவரது 2 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகையும் திருடு போய் உள்ளதாம்.

அத்துடன் வீட்டில் இருந்த சில பொருட்களையும் திருடன் எடுத்துச் சென்றுள்ளான். உடனடியாக இது பற்றி பொலீஸில் புகார் கொடுத்துள்ளார் வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் பாண்டிபஜார் பொலீஸார்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!