என்னாயிற்று விஜயகாந்த் அவர்களுக்கு..!? ஆபத்தான நிலையிலும் அரசியல் செய்வது சரியா..!? ஒரு நிமிடம் படியுங்கள் உங்கள் கண்களும் கலங்கும்..!

தமிழ் நாட்டு அரசியல் தற்போது சூடு பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர் பார்க்க முடியுமென அரசியல் அவதானிகள் கணிப்பு தெரிவித்துள்ள நிலையில் சிலவிடயங்கள் மறைக்கப் பட்டு வருகிறது. நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் அண்மையில் அமெரிக்கா சென்று தனது இரண்டாவது சத்திர சிகிச்சையை முடித்து நாடு திரும்பினார். அவரை முழுமையான ஓய்வு எடுக்கும் படி வைத்தியர்கள் கூறி இருந்தனர்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஒருவரின் உதவியின்றி எழுந்து நடக்கவோ நிற்கவோ முடியாத நிலை விஜய காந்த் அவர்களுக்கு. இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. தேமுதிக கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் நிற்பது நீங்கள் அறிந்ததே.. ! விஜய காந்துடன் கூட்டணி வைத்ததற்கான காரணம் அவரது உடல் நலக்குறைவு காரணமாக வரும் ஓட்டுக்கள் என நாம் அறிவோம்.

கள்ளக்குறிச்சியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதேஷ் தேர்தலில் நிற்பதால் அவரால் தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது எனவே விஜயகாந்த் அவர்களை வைத்து பிரச்சாரம் செய்தால் ஓட்டு கிடைக்கும் என பிரேமலதா உட்பட பலர் போட்டதிட்டம் மண்ணாகியுள்ளது.விஜய காந்த் அவர்களின் உடல் நிலை மிக மோசமடைந்து உள்ளது. தங்கள் சுய நலத்திற்காக விஜய காந்தை ஓய்வு எடுக்க விடாமல் செய்ததால் அடிக்கடி நினைவை இழந்துவிடுகிறாராம்.

இதனால் அவரை கட்டிலை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் முழுவதுமான ஓய்வில் இருக்கும் படியும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதனால் அரசியல் தந்திரங்கள் சற்று பின் வாங்கி உள்ளது. பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் இருக்கும் விஜயகாந்த் அவர்களை பார்க்கும் போது இவருக்கா இந்த நிலை என எண்ணத் தோன்றுகிறது. தற்போது தேர்தல் பிரச்சாரத்தை விஜயகாந்த்தின் இரு மகன்கள் மற்றும் மனைவி பிரேமலதா போன்றோர் ஆரம்பித்துள்ளனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!