இந்துச் சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்யும் நபர்களை அதிரடியாக பிடிக்குமாறு பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்து…

பாகிஸ்தானில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் கடத்திச் சென்று முஸ்லீம் மதத்திற்கு மாற்றி கட்டாய திருமணம் செய்து வைப்பது தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் விசாரணை நடத்துமாறு கூறியுள்ளார். பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்களிற்கு மேல் வாழ்கின்றனர்.இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, ரவீனா(13) மற்றும் ரீனா(15) ஆகிய இரண்டு இந்து சிறுமிகளை அப்பகுதியில் செல்வாக்குடையவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.


IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

கடத்திச் சென்றதுடன் நிற்காமல் இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவர் கட்டாய மதமாற்றம் செய்து, இரு நபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறுமிகளை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!