குறிப்பிட்ட சில அமைச்சர்களுடன் ஹோட்டலில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ….

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பிறந்த நாளை ஹோட்டல் ஒன்றில் அமைச்சர்களுடன் வெகு கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹம்பாந்தோட்டை சென்றிருந்தார்.அவருடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ரிஷாட் பதியூதின் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.

இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த நாளுமாகையால் அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஷங்கிரிலா ஹோட்டலில் 70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக  

 

இதற்காகவே ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டலில் விசேட கேக் ஒன்று தயாரிக்கப்பட்டு வெட்டப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ரிஷாட் பதியூதின் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பிரதமரது பிறந்த நாளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!