வீட்டுக் காவலில் வைக்கப்படும் ரஜனி நண்பர்…

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அரசுக்கு எதிராக போராட முயன்ற நிலையில் வீட்டுக்கு காவலில் வைக்கப்பட்டார்.இவருடைய படங்களில் நடிகர் ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் மோகன் பாபு திருப்பதியில் ஒரு பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். ஆந்திராவில் இந்த கல்லூரி மிகவும் பிரபலமானது.இந்நிலையில் கல்வி கட்டண பிரச்சினை தொடர்பாக ஆந்திர அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மோகன் பாபு அறிவித்தார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தனது கல்லூரி மாணவர்களுடன் வீதியில் இறங்கி போராட மோகன் பாபு திட்டமிட்டிருந்தார்.  தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

மோகன் பாபுவை ஆந்திர போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.மேலும் அவரது கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்காமல் தடுப்பதற்காக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!