மீண்டும் இந்தியா- பாகிஸ்தானில் தொடரும் பதற்றம்…. (இ..ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ)

நடந்து முடிந்த பதற்றத்தின் பின்னர் மீண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.இத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்து முகமாக இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.இதில் பாகிஸ்தானுடைய இராணுவ முகாம்கள் மற்றும் தளங்களையும் அழித்து வருகின்றது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், அந்நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.இந்த வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவி வருகின்றது.

பெரும் பதற்றமான சூழலில் நடந்து முடிந்த யுத்தம் ஒரு சில நாட்களாக அமைதி நிலையில் இருந்து வந்தது தொடர்ந்து அமைதி நிலையை பேணி இந்தியா – பாகிஸ்தான் இடயில் நல்லுறவு மேம்பட இருக்கின்ற வேளையில் மறுபடியும் ஒரு பதற்ற நிலை உருவாகியிருப்பது மக்கள் மனதில் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!