சாலை விபத்தில் இறந்தவர்களிற்காக சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை…

கடந்த ஆண்டு ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உள்பட 29 பேர் பயணம் செய்த பஸ்சுடன் லாரி மோதியதில் 16 பேர் பலியாகிய சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த சாரதி ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது கனடா நாட்டு நீதிமனறம்.கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உள்பட 29 பேர் ஒரு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது எதிர்த்திசையில் வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுடன் மோதியதில்

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக  

பஸ்சில் இருந்த 16 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர், எஞ்சியிருந்த 13 பேரும் படுகாயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாரதி மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்,

இந்த வழக்கு விசாரணையில்,இந்திய நாட்டவரான ஜஸ்கிரத் சிங் சித்து மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.இந் நிலையில் இந்த ஆண்டு சித்துவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!