பழங்குடியினரின் கண்மூடித் தனமான தாக்குதலில் நுற்றுக்கணக்கான மக்களின் உயிர் பரிதாபமாகப் போன சம்பவம்…

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தோகான் பழங்குடியின மக்களான இவர்கள் வேட்டைத் தொழில் செய்து வருகின்றனர். இவர்களிற்கும் விவசாயத் தொழில் செய்து வரும் புலானி விவசாயிகளிற்கும் இடையில் இடைக்கிடை கொடூர தாக்குதல் இடம்பெற்று புலானி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

வீடுகளிற்குள் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கி, கத்தி. அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் கொண்டு பலரை வெட்டி சாய்த்துள்ளனர்.இதில் பல மக்கள் காயமடைந்துள்ளனர்.

சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஒட்டு மொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

 

You might also like
error: Alert: Content is protected !!