கைகளை இணைத்துக் கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொண்டகாதல் ஜோடி…

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து கடிதம் எழுதி வைத்து விட்டு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஜோடியின் சடலம் ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தை அறியும் போது.

பல தகவல்கள் வெளிவந்துள்னர். கடந்த வெள்ளிக் கிழமை ஆற்றில் பெண்களிற்கான பை ஒன்று மிதந்து வந்ததாகவும் அதற்குள் ஒரு கடிதம் இருந்ததாகவும் கூலித் தொழில் செய்யும் ஒருவர் கூறியுள்ளார்.அதனை ஆராய்ந்து பார்த்தபொழுது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக   

இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். என்னுடைய சகோதரியை சந்திக்க சென்ற போது தான் சுவேதா எனக்கு பழக்கமானாள். ஆனால் எங்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தினை வைத்து ஆற்றில் சடலமாக கிடந்தது 27 வயதான கமலேஷ் மற்றும் 16 வயதான சுவேதா என்பதை அடையாளம் கண்டுள்ளனர் பொலிஸார், மற்றும் கமலேசின் பைக்கற்றில் இருந்த ஆதார் கார்டை வைத்து அவரது பெற்றோரிற்கு தகவல் வழங்கப்பட்டது,அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!