தொட்டதும் உடையாமல் உறுதியாகவும் அழகாகவும் நகம் வளர வேண்டுமா? இதோ நகப் பிரியர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!

உடலையும் முகத்தையும் எப்படி அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஆசை படுகிறோமோ அதே போல் தான் விரலில் உள்ள நகங்களையும் அழகாக வைத்திருக்க ஆசை படுவோம். சிலர் நகம் வளர்ப்பதை ஹாபியாக கூட வைத்திருப்பார்கள். நகத்தை வளர்த்து நெயில் பாலிஸ் பூசினால் நகங்கள் அத்தனை அழகாக இருக்கும். இது கைகளுக்கு புது அழகை கொடுக்கும். ஆனால் சிலருக்கு நகங்கள் வளர்ந்ததும் உடைந்துவிடும். சிலருக்கு வளர்ச்சி குறைவாக இருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது உறுதியாகவும் அதே நேரம் சீக்கிரமாகவும் நகங்கள் வளர என்ன செய்ய வேண்டும் என்று தான்..!

முதலாவது டிப்ஸ்: இது கைகளை கிளீன் செய்யப் பயன்படும் குறிப்பு, இதனை வாரம் ஒரு முறை செய்தால் போது: ஒரு பாத்திரத்தில் மிதமான சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு, உப்பு, அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு ஷாம்பு சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இப்போது அந்த நீரில் உங்கள் கைகளை 5 நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள். பின் நீரில் இருந்து கைகளை எடுத்து விரலின் நகங்களை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

பிரஷ் பாவிக்க வேண்டாம் உங்கள் கைகளால் தேய்க்கவும். பின் மீண்டும் இரண்டு நிமிடம் வைத்து இருங்கள். பின்பு நல்ல நீரில் கைகளை கழுவி விடுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்தால் போதும். அடுத்த டிப்ஸ் நகம் வளர்வதற்கு. ஆமணக்கு எண்ணெய் ஒரு கரண்டி, தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி , எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இந்த கலவையை விரலில் அரைவாசி வரை..

நகத்துடன் சேர்த்து 3 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள் . அதன் பின் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின் குளிர்ந்த நீரை கொண்டு கழுவுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் செய்து விட்டால் போதும் உங்கள் நகங்கள் உறுதியாக வளரும் . இது நகப் பிரியர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். ஒரு வாரம் தொடர்ந்து பாவித்த பின் மாதம் 2 முறை மட்டும் செய்தால் போதுமானது..! பிடித்தால் பகிருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!