மீண்டும் தொடங்குகிறது “மித்ர சக்தி” – இலங்கை இந்திய கூட்டுப் பயிற்சி….!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் இராணுவ ஒத்துழைப்பின் ஆதார சக்தியாகவும் கூட்டு நல்லெண்ண நடவடிக்கையாகவும் இருக்கின்ற மித்ர சக்தி உனும் கூட்டு இராணுவப் பயிற்சி இன்று ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தியத்தலாவ இராணுவ முனாமில் இப் பயிற்சி நடைபெறும் என்றும் இரண்டு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இக் கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையில் 120 வீரர்கள் வீதம் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இப் பயிற்சியானது இரு நாடுகளின் படையினர்களுக்கும் இடையே நெருங்கிய உறவை விரிவாக்குவதற்கும் இரு நாடுகளின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இப் பிராந்தியத்தைக் கொண்டுவருவதற்கான கூட்டு பயிற்சிக் கட்டுப்பாட்டின் திறனை மேம்படுத்துவதே இப் பயிற்சியின் நோக்கம் என்றும் இந்திய இராணுவ அதிகாரி லெப்டினன்ட் மோகித் வைஷ்ணவா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்கிவரும் நிலையில், கடந்த வருடம் மகாராஷ்டிரா புனேயில் உள்ள இராணுவ பயிற்சி நிலையத்தில் மித்ரா சக்தி இருதரப்பு கூட்டு பயிற்சி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா கடற்படையினருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையிலான பெருமெடுப்பிலான கடற்பயிற்சி ஒன்றுக்காக ஆயிரக் கணக்கான அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இலங்கைக் கடற்பகுதிக்கு 4 போர்க் கப்பல்களுடன் வருகை தந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!