என் குழந்தை உன் மனைவியின் வயிற்றில்..! படுக்கையறை காட்சிகளை வெளியிட்ட இளைஞன்..! துடித்துப் போன இராணுவ வீரர்.!

கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குஜராத்தின் ஜாம்நகர் இராணுவ முகமில் தனது துப்பாக்கியால் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் தேடிய பொலீஸாரை அதிர வைத்துள்ளது. சிறு வயதில் இருந்தே இராணுவத்தின் சேர வேண்டும் என ஆசைபட்ட வைஷாக் தனது இஷ்டப் படியே இராணுவத்தில் சேர்ந்தார். தாய் தந்தையரின் செல்லப் பிள்ளையான வைஷாக் கிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணை இரண்டு குடும்பத்தின் விருப்பத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

விடுமுறை முடிந்து குஜராத் செல்ல தயாரான வைஷாக்கிடம் ஏற்கனவே தனது முதல் காதல் பற்றியும் பிரிந்தது பற்றியுன் அஞ்சனா கூறியிருந்தார். கடந்தவற்றை மறந்துவிடு என கூறிய வைஷாக் குஜராத் சென்றுவிட்டார். ஆனால் மனைவி அஞ்சனா தன்னை ஏமாற்றி விடயம் சில நாட்களிலேயே வைஷாக்கிற்கு தெரிய வந்தது. திருவனந்தபுரம் காவல்துறை தலமை அலுவலக ஊழியரான 26 வயதான அமிதாப் என்பவர் தான் அஞ்சனாவின் காதலர் என அமிதாப் கால் செய்து பேசியதன் மூலம் தெரிந்துகொண்டார் வைஷாக். ஆனால் மனைவி ஏற்கனவே தனக்கு அனைத்தையும் கூறிவிட்டதால் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.

ஆனால் அமிதாப் தினமும் காதலி அஞ்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளதுடன் நீ ஊருக்கு வந்து என்னுடைய குழந்தையை கொஞ்சப் போகிறாய் உன் படுக்கை அறையில் தான் இருக்கிறேன் என தகாத முறையில் பேசியுள்ளார். அத்துடன் படுக்கை அறையில் எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த வைஷாக் தனது சகோதரனுக்கு அனைத்தையும் கடிதம் மூலம் எழுதி அனுப்பிவிட்டுதனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முக்கிய ஆதாரமாக கிடைத்த கடிதத்தின் அடிபடையில் அமிதாப் மற்றும் அஞ்சனா இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் திருமணம் முடித்ததும் கணவர் சென்றுவிட அமிதாப் கண்ணீருடன் பேச மனம் மாறி மீண்டும் முதல் காதலனுடன் சேர்ந்துள்ளார் அஞ்சனா. அத்துடன் வைஷாக் வீட்டில் அஞ்சனாவிற்கு கொடுக்கப் பட்ட பாரம்பரிய நகைகளையும் அமிதாப்பிற்கு கொடுத்துள்ளார் அஞ்சனா. இது அமிதாப்பிற்கு புதிது அல்ல தான் காதலித்து பின் பெண்களை ஏமாற்றி விடுவதும் அவர்கள் வேறு ஒருவரை திருமணம் செய்த பின் அவர்களிடம் பணம் பறிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அமிதாப் மீது பொலீஸ் கேஸ் உள்ளது குறிப்பிட தக்கது.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!